மியன்மாரில் அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளப்பெருக்கு

யங்கூன்: மியன்மாரில் ஓர் அணைக்கட்டு உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரண மாக நீர் ஒரு நகரம் மற்றும் இரு கிராமங்களுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிப்பட நேர்ந்தது. திடீர் வெள்ளப்பெருக்கால் மூன்று முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டதாக தீயணைப்புப் படையினர் கூறினர். வெள்ளநீர் சூழ்ந்த பகுதி களிலிருந்து 5,400 பேர் வெளியேற்றப்பட்டதாக பேரிடர் நிவாரணக் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சுமார் 1,500 பேர் வெள்ளநீரால் பாதிக்கப்படாத மற்றொரு நகரில் தற்காலிகமாக தங்கவைக்கப் பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார். மேலும் 1,500 பேர் அருகில் உள்ள பெளத்த மடாலயத்தில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

வெள்ள நீர் சூழ்ந்த கிராமங் களிலிருந்து மக்களை வெளி யேற்றும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அணைக்கட்டு உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிர் சேதம் இல்லை என்று அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கூறினார். மியன்மாரில் இந்த ஆண்டு ஜூலை மாதம் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். சுமார் 100,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப் பட்டனர்.

மியன்மாரில் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மூங்கில் மிதவை மூலம் கிராம மக்கள் காப்பாற்றப் பட்டனர். மியன்மாரில் ஓர் அணைக்கட்டு உடைந்ததால் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளநீர் அருகில் உள்ள ஒரு நகரம் மற்றும் இரு கிராமங்களுக்குள் புகுந்தது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!