இரண்டரை ஆண்டுகால கடும் உழைப் பின் பலனாக வெளிவருகிறது 'இமைக்கா நொடிகள்'. நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. நயன்தாராவின் தம்பியாக அதர்வா வும், விஜய் சேதுபதி கௌரவ வேடத் திலும் நடித்துள்ளனர். அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கன்னா நடித்துள்ளார். 'டிமாண்டி காலனி' படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் இயக்குநராக கால் பதித்த அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் இது. முதல் படத்தில் திகில் நிறைந்த கதையை இவர் கையாண்ட விதம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து 'இமைக்கா நொடிகள்' படத்தைத் துவங்கினார். "இந்தப் படத்தை அவ்வளவு சுலபமாக முடித்துவிட முடியவில்லை.
இரண்டரை ஆண்டு காலம் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டி இருந்தது. எனினும் படத்தை வெற்றிகரமாக முடித்ததில் மகிழ்ச்சி. "கடின உழைப்பு, மிகுந்த வலி, அவமானங்கள், ஏமாற்றங்கள், வேடிக்கை, இக்கட்டான தருணங்கள் என இரண்டரை ஆண்டு காலம் நான் எதிர்கொண்ட எல்லாமே முடிவுக்கு வந்துள்ளது. "நம்பிக்கை இழந்துவிடாமல் எனக்குப் பக்கபலமாக இருந்த குழுவுக்கு மிகப்பெரிய நன்றி," என தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அஜய் ஞானமுத்து. 'இமைக்கா நொடிகள்' நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடித்த படைப்பாக இருக்கும் என அதர்வா தெரிவித் துள்ளார். இந்தப் படம் தமக்கு மற்றொரு வெற்றிப்படமாக அமையும் என நயன் தாராவும் கூறியுள்ளார். 'இமைக்கா நொடிகள்' விநியோக உரிமையைப் பெற விநியோகிப்பாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவியதாம். இதனால் படக் குழுவினர் உற்சாகத் தில் உள்ளனர்.
'இமைக்கா நொடிகள்' படக்குழுவினர்.