சென்னை: தமிழகத்தின் இன்றைய ஆட்சியாளர்கள் குறித்து நினைக் கும்போது நெஞ்சு பொறுக்குதில் லையே என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டலின் தெரிவித் துள்ளார். நேற்று முன்தினம் அக்கட்சி யின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், திமுக எனும் 70 ஆண்டு வர லாற்றை நெஞ்சில் சுமந்து கொண்டு, முற்றிலும் புதிய எதிர் காலத்தை நோக்கி கட்சியையும் தமிழினத்தையும் அழைத்துச் செல்ல விரும்புவதாகக் குறிப்பிட் டார்.
திமுக எனும் கோட்டை பகுத் தறிவு, சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம் எனும் நான்கு தூண் களால் எழுப்பப்பட்டது என்று குறிப்பிட்ட அவர், தற்போது சுய மரியாதைக் கொள்கைகளுக்குப் பெரிய ஆபத்தும் சவாலும் ஏறபட் டுள்ளதாகத் தெரிவித்தார். கல்வி, கலை, இலக்கியம், மதம் ஆகியவற் றின் அடிப்படைகளை எல்லாம் அதிகார பலத்தால், மதவெறியால் அழித்திட மத்திய அரசு முயன்று வருவதாக ஸ்டாலின் கூறினார். "நீதித்துறை, கல்வித்துறை செயல்பாடுகள், மாநிலங்களின் ஆளுநர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் அனைத்தும் மக்களாட்சி யின், மதச்சார்பற்ற கொள்கை களின் மாண்பைக் குலைக்கும் செயல்களாகவே அமைந்துள்ளன.
"அண்ணா, கருணாநிதி ஆகியோரின் தொலைநோக்குப் பார்வையில் துவக்கி வைக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் தங்கள் சுயநயலம் ஒன்றுக்காகவே தாரைவார்த்து, தமிழக மக்களின் நலன்கள் அனைத்தையும் மாநில அரசு காவு கொடுக்கிறது," என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். சமூகத் தீமைகளை அகற்று வதே திமுகவினரின் முதல் கடமையாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் காவி வண்ணமடிக்க நினைக்கும் மோடி அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
"நாம் கடவுள் எதிர்ப்பாளர்கள் அல்ல. நாம் நம்பவில்லை எனினும் பிறரின் நம்பிக்கையை மதிக்கி றோம். யார் தவறு செய்தாலும், அது நான் என்றாலும் அதை எதிர்த்துக் குரல் கொடுப்போர்தான் திமுகவினர்," என்றார் ஸ்டாலின்.