யங்கூன்: மியன்மாரின் மத்தியப் பகுதியில் உள்ள பகோ வட்டாரத்தில் ஓர் அணைக்கட்டு உடைந்ததால் நீர்மட்டம் அதி கரித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரண மாக வெள்ளநீர் ஸ்வார் நகரத் திற்குள்ளும் அருகில் உள்ள இரு கிராமங்களுக்குள்ளும் புகுந்தது. இதனால் அங்குள்ள பல வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்த வேளையில் குடியிருப்பாளர்கள் 54,000 பேர் வெளியேற்றப்பட்ட தாக அதிகாரிகள் கூறினர். வெள்ளப்பெருக்கு காரணமாக யங்கூன் உட்பட மூன்று முக்கிய நகரங்களை இணைக்கும் பெரிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.
அந்த அணைக்கட்டு 2004ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சகதியுடன் கூடிய வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளை சென்றடைவதில் மீட்புக் குழுவினர் சிரமத்தை எதிர்நோக்கியதாகக் கூறப்பட்டது. ஆண்டுதோறும் மியன்மார் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படுகிறது.
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி