சீனாவை மீண்டும் சாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

வா‌ஷிங்டன்: வடகொரியா அதன் அணுவாயுதத் திட்டங்களைக் கைவிடுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை என்று பரவலாக குறை கூறப்படும் வேளையில் இந்த விவகாரத்தில் சீனா அதன் பங்கை ஆற்றவில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

வடகொரியா அதன் அணுவாயுதங்களைக் களைய அதன் நட்பு நாடான சீனா முக்கிய பங்காற்ற முடியும் என்று கூறிவந்த திரு டிரம்ப் தற்போது சீனா மீது குறை கூறியுள்ளார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகப் பூசல் நீடிக்கும் வேளையில் சீனா மீது திரு டிரம்ப் அடுத்தடுத்து குறை கூறி வருகிறார்.

தென்கொரியாவுடன் சேர்ந்து அமெரிக்கா மேற்கொள்ளும் ராணுவப் பயிற்சியை இரு நாடுகளும் நிறுத்தி வைத்துள்ள நிலையில் இத்தகைய போர் பயிற்சிகளுக்கு அமெரிக்கா செலவு செய்யக்கூடாது என்று திரு டிரம்ப் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். ஆனால் அந்த ராணுவப் பயிற்சி மீண்டும் தொடங்கப்பட்டால் என்றும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பயிற்சியாக அது இருக்கும் என்று திரு டிரம்ப் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!