மதுரை: திமுகவில் தன்னை சேர்த்துக் கொள்ள வேண்டும் என மு.க.அழகிரி மீண்டும் வலியு றுத்தி உள்ளார். மதுரையில் நேற்று செய்தியாளர் களிடம் பேசிய அவர், கட்சியில் மீண்டும் இணைத்துக் கொண்டால் அனைவருடனும் இணைந்து பணி யாற்ற தயார் என்று குறிப்பிட்டார். "திமுகவில் சேர்த்துக் கொண் டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளத்தானே வேண் டும். அவ்வாறு என்னை சேர்த்துக் கொள்ளாவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக் கப்படும்," என்றார் அழகிரி.
கடந்த சில தினங்களாக திமுக தலைமையை கடுமையாக விமர்சித்து வந்த அழகிரி, தற் போது சற்றே இறங்கி வந்து இவ்வாறு கூறியிருப்பது திமுக வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே அதிமுக, பாஜ கவை தோற்கடிப்பதே திமுகவின் லட்சியம் என அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தொண்டன் வேறு, தலைவன் வேறு எனும் பாகுபாடு பயணிக்கும் குடும்பப் பாசமிக்க இயக்கம் தான் திமுக என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.