ஜெயம் ரவிக்கு ஜோடியான காஜல்

ஜெயம் ரவி நடித்துள்ள புதிய படத்தில் அவரது ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார் காஜல் அகர்வால். அறிமுக இயக்குநர் இயக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. ஏற்கெனவே ஜெயம் ரவியின் ‘போகன்’ படத்தில் அவருடன் ஜோடி சேர இருந்தார் காஜல். ஆனால் சில காரணங்களால் அதில் அவர் நடிக்கவில்லை. அப்படக்குழு பின்னர் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்தது. ஜெயம் ரவி அடுத்து தனது சகோதரர் மோகன்ராஜா இயக்கத்தில் ‘தனி ஒருவன்- 2’ படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு முன்னதாக குறைந்த செலவில் தயாராகும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். நகைச்சுவை கலந்த குடும்பப் படமாக இது உருவாகிறதாம். “ஜெயம் ரவி திறமை வாய்ந்த நடிகர். அவருடன் நடிக்க முடியாத வருத்தம் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி,” என்கிறார் காஜல் அகர்வால். ‘

இப்பகுதியில் மேலும் செய்திகள்