சோல்: தென்கொரியப் பள்ளிகளில் காப்பி விற்பனை கூடிய விரைவில் தடைசெய்யப்படவுள்ளது. இன்னும் இரு வாரங்களில் அது நடப்புக்கு வரும். காப்பியில் உள்ள அதிகப்படி யான 'கஃபேன்' எனும் மூலப் பொருளை உட்கொண்டால் தலை சுற்றல், சீரற்ற இதயத் துடிப்பு, தூக்கப் பிரச்சினைகள் உள்ளிட் டவை ஏற்படக்கூடும் என்பதால் காப்பிக்குத் தடை விதிக்கப்படுவ தாகத் தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. தென்கொரியப் பள்ளிகளில் 'கஃபேன்' அதிகம் கொண்ட உணவு, பானங்களை மாணவர்கள் வாங்க ஏற்கெனவே தடை விதிக்க ப்பட்டிருந்தது.
இருப்பினும், ஆசிரியர்கள் காப்பி வாங்கும் தானியக்க இயந் திரங்களை மாணவர்களும் எளிதா கப் பயன்படுத்த முடிகிறது. புதிய தடை காரணமாக அந்த நிலை இனி ஒரு முடிவுக்கு வரும். மாணவர்கள் தேர்வு நேரங்களில் பின்னிரவில் கண்விழித்திருந்து படிக்க அதிகளவில் காப்பியை அருந்துகின்றனர். தென்கொரியர்கள் ஒவ்வொரு வரும் கடந்த ஆண்டு சராசரியாக 512 குவளைகள் காப்பி அருந்தியதா க கொரிய அனைத்துலக வர்த் தகச் சங்கம் கூறியுள்ளது. அச்சங்க த்தைப் பொறுத்தவரை, உலகி லேயே ஏழாவது ஆகப் பெரிய காப்பி இறக்குமதியாளராக தென் கொரியா உள்ளது. அந்நாடு கடந்த ஆண்டு US$700 மில்லியன் (S$960 மில்லியன்) மதிப்பிலான காப்பியை இறக்குமதி செய்தது.