உணவுச் சேவைத்துறை நீடிக்க வேண்டும் என்றால் தொழில் நுட்பத்தைத் தழுவுவதைத் தவிர அத்துறைக்கு வேறு வழியில்லை என்று வர்த்தக, துறை மூத்த துணை அமைச்சர் சீ யோங் டாட் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பத்தை அத்துறை அறிவார்ந்த முறையில் கையாள் வது முக்கியம் என்று அவர் கூறினார். ஆசிய சமையற்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற உணவுச் சேவைத்துறை உருமாற்று மாநாட்டில் கலந்துகொண்டு திரு சீ இது குறித்து பேசினார். தொழில்நுட்பம், மின்னிலக்க முறை ஆகியவற்றை உணவு வர்த்தகங்கள் கையாள வேண்டும் என்ற இலக்குடன் மாநாடு நடத்தப்பட்டது.
ஊழியர் பற்றாக்குறை, அதி கரித்து வரும் செலவினம் ஆகியவற்றை எதிர்கொள்ள தொழில்நுட்பத்துக்கு முக்கியத் துவம் கொடுப்பது அவசியம் என்று மாநாடு வலியுறுத்தியது. தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தி உணவுச் சேவை களில் உள்ள பல்வேறு செயல் முறைகளை மேம்படுத்தலாம் என்று திரு சீ தெரிவித்தார். இருப்பினும், நிலைமையை ஆராயாமல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் விளைவாக ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்தார். 'பா குத் தே' உணவகம் ஒன்று மின்னலிக்க உணவு வகை பட்டியல் ஒன்றைப் பயன்படுத் தியதை அவர் உதாரணமாகக் காட்டினார்.