சென்னை: சென்னையில் பொதுப் போக்குவரத்து பேருந்தின் படிக் கட்டில் தொங்கியவாறு நீண்ட பட்டாக்கத்தியைச் சாலையில் உரசி தீப்பொறி எழுப்பியபடி சென்ற சென்னை மாநிலக் கல்லூ ரியைச் சேர்ந்த நான்கு மாணவர் களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த புதன் கிழமை பாரிமுனையில் இருந்து வியாசர்பாடி, மூலக்கடை, தங்கச் சாலை, மாதவரம், செங்குன்றம், சோழவரம் வழியாக காரனோடை சென்ற '57எஃப்' வழித் தடம் எண் பேருந்தில் பயணம் செய்த சில மாணவர்கள் வாசல் படிக் கட்டில் தொங்கியவாறு கையில் வைத்திருந்த சுமார் இரண்டு அடி நீளமுள்ள பட்டாக்கத்தியைச் சாலையில் உரசி தீப்பொறியை ஏற்படுத்தினர்.
"மாநிலக் கல்லூரிக்கு ஜே" என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகளும் சாலையில் சென்ற பொதுமக்களும் அதிர்ச்சிய டைந்தனர். இதை கைத்தொலை பேசி மூலம் பதிவு செய்த ஒருவர், சமூக ஊடகங்களில் பதி வேற்றினார். இதற்கிடையே தகவல் அறிந்த காவல்துறையினர் வண் ணாரப்பேட்டை காவல் நிலையத் தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாநிலக் கல்லூரி மாணவர்களில் சிலர் இதில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நான்கு மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.