இந்தியாவில் பாஜகவும் திமுகவும் பல சித்தாந்தக் கோட்பாடுகளைப் பகிர்ந்துகொள்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரி வித்து இருக்கிறார். கடந்த கால வரலாறுகளைப் பேணி காப்பது, அதிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்வது ஆகியவை எல்லாம் இவற்றில் உள்ளடங்கும் என்று அவர் தெரிவித்தார். திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டபோது பாரதீய ஜனசங் கட்சி யுடன் திரு கருணாநிதி அணுக்க மாகச் செயல்பட்டார் என்றும் 1989 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் பாஜகவுடன் சேர்ந்து அவர் அர சியல் நடத்தினார் என்றும் குறிப் பிட்டார்.
"திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடைப்பட்ட உறவு நெடுநாள் உற வாகும். அது மனமுவந்த உறவாக இருந்து வந்துள்ளது. "காங்கிரஸ் ஆதிக்கத்தை முதன்முதலாக எதிர்த்தவை இந்த இரண்டு கட்சிகள்தான். அதே போல அவசரநிலையையும் முதன் முதலாக பாஜகவும் திமுகவும்தான் எதிர்த்தன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நடப்புக்குக் கொண்டு வந்த அவசரநிலையை எதிர்த்த முதல் முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி," என்றார் திரு கட்கரி. தன்னுடைய கொள்கைகளிலும் கோட்பாடுகளிலும் உறுதியாக இருந்த காரணத்தினால் திமுக வுக்குப் பல பாதிப்புகள் ஏற்பட்ட தாகவும் அவர் குறிப்பிட்டார்.