சிங்கப்பூரில் உள்ள அமைப்புகள், பொது மக்களின் அடையாள அட்டை எண்களைப் பெறுவது, பயன்படுத்துவது, அவற்றை வெளியிடுவது அல்லது அத்தகைய அட்டை களை நகல் எடுப்பது எல்லாம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் சட்டவிரோத காரியமாகக் கருதப்படும். தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் நேற்று வெளியிட்ட கடுமையான விதி முறைகள் அத்தகைய காரியங்களை குற்றச் செயலாக வரையறுத்து இருக்கின்றன. சிங்கப்பூரில் கடைத்தொகுதி போன்ற நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை அதிர்ஷ்ட குலுக்கிற்கு, உறுப்பினர் ஆவதற் குப் பதியும்போது அவர்களின் அடையாள அட்டைகளின் விவரங்களைப் பெறுவது காலாகாலமாக நடந்து வருகிறது.
ஆனால் புதிய விதிமுறைகளின்படி அத்தகைய நிறுவனங்கள், இனிமேல் அப்படி செயல்பட முடியாது. அடையாள அட்டை விவரங்களைப் பெற்று இருக்கும் அமைப்பு கள், அந்த விவரங்களைத் தங்களிடத்தில் வைத்திருக்க வேண்டுமா என்பதை ஆராயும் படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. வேண்டாமெனில் அந்த விவரங்களை தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்திற்கு இணங்கும் வகையில், முறையான வழி களில் அடுத்த ஆண்டு வாக்கில் ஒழுங்கு படுத்திவிடும்படி ஆணையம் அவற்றுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது. அடையாள அட்டைத் தகவலை வைத் திருக்கலாம் என்று முடிவு செய்யும் அமைப்பு கள், அத்தகைய தகவல்களுக்குப் போதிய பாதுகாப்பு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இன்றைய மின்னிலக்க பொரு ளியலில் அடையாள அட்டை விவரங்களைக் கண்டபடி பெறுவதும் அவற்றை அலட்சியமாக பயன்படுத்துவதும் பல ஆபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று இந்த ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரி வித்தது.
சிங்கப்பூரில் சட்டப்படி தேவைப் பட்டாலொழிய, ஒருவரின் அடையாள அட்டையை வைத்திருக்க அடுத்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமைப்புகளுக்கு அனுமதி இராது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்