ரூ.1,000 கோடி செலவில் தயாராகும் ‘மகாபாரதம்’

முகேஷ் அம்பானி தயாரிக்கவிருக்கும் 'மகாபாரதம்' திரைப்படம் ரூ.1,000 கோடி செலவில் பல மொழிகளிலும் எடுக்கப்பட உள்ளது. இந்தத் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு 'பாகுபலி' புகழ் பிரபாசுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இந்தி நடிகர் அமீர்கான். அமீர்கான் ஸ்ரீகிருஷ்ணன் கதாபாத் திரத்தில் நடிக்கிறார் என்றும் மகாபாரதத் தில் மற்ற எல்லா கதாபாத்திரங்களையும் காட்டிலும் பிரசித்தி பெற்ற அர்ஜுனன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு 'பாகுபலி' பிரபாசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தாகவும் தற்போது செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

'பாகுபலி' வெற்றிக்குப் பிறகு இயக்கு நர்கள், தயாரிப்பாளர்களின் பார்வை புராண, இதிகாச, சரித்திர கதைகளின் பக்கம் திரும்பி உள்ளது. ராமாயணக் கதையை மையமாக வைத்து பாலகிருஷ்ணா, நயன்தாரா நடிப்பில் ஏற்கெனவே 'ஸ்ரீராமராஜ்ஜியம்' படம் தமிழ், தெலுங்கில் வந்தது. நாகார்ஜுனா, அனுஷ்கா நடிப்பில் 'ஓம் நமோ வெங்கடேசாய' என்ற பெயரில் திருப்பதி வெங்கடாஜலபதியின் திருவிளை யாடல்களைச் சித்திரித்துப் பக்திப் படம் வெளியானது. சித்தூர் ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான 'பத்மாவத்' படத் துக்குப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

வசூலில் இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் அது சாதனை படைத்தது. ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க் கையும் படமாகி வருகிறது. இதில் லட்சுமி பாயாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். அரண்மனை அரங்குகள் அமைத்துப் படப் பிடிப்பை நடத்துகின்றனர். தெலுங்கில் சிரஞ்சீவி, அமிதாப் பச் சன், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் 'சைரா நரசிம்ம ரெட்டி' என்ற சரித்திரப் படம் தயாராகிறது. இந்நிலையில் 'மகாபாரதம்' கதையில் கர்ணன், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன், துரியோதனன், சகுனி, திரௌபதி உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களுக்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!