வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஆற்றும் பணி திருப்தியளிக்கவில்லை என்று 60% அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர். திரு டிரம்ப்பிற்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஆதரிப்பதாக 50 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை மாளிகையில் திரு டிரம்ப் ஆற்றி வரும் பணிகள் சிறப்பாக உள்ளது என்று 36% அமெரிக்கர்கள் மட்டுமே தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு மூலம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.