கோலாலம்பூர்: கிம் ஜோங் நாம் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க இரு இந்தோனீசியப் பெண்களை மலேசியப் போலிசார் தேடி வருகின்றனர்.
தேடப்படும் ரைசா ரின்டா சல்மா, டேசி மெரிசின்டா ஆகிய இருவருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று சிலாங்கூர் போலிஸ் படைத் தலைவர் ஃபாட்ஸில் அகமட் கூறினார். அவர்கள் இருக்கும் இடம் பற்றி அறிந்தவர்கள் போலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் உறவினரான கிம் ஜோங் நாம் சென்ற ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். ஆபத்தான நச்சு ரசாயனப் பொருளால் அவர் தாக்கப்பட்டது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கொலை தொடர்பில் இந்தோனீசியப் பெண் சிட்டி ஆய்சா மீதும் வியட்னாமியப் பெண் ஹுவாங் மீதும் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.