புதுடெல்லி: பெண்களின் திருமண வயதைப் போல் ஆண்களுக்கும் திருமண வயதை 18 ஆக நிர்ண யிக்கலாம் என்று மத்திய அரசுக் குச் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தற்போது ஆண்களின் திரு மணத்திற்கான குறைந்தபட்ச வயது 21 ஆக உள்ளது.
ஆண்-பெண் சமத்துவம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கி வரும் நிலையில் இந்த வேறுபாடு தேவையற்றது என்று சட்ட ஆணையம் கருத்துத் தெரிவித் துள்ளது. கணவரைவிட மனைவி வயதில் இளையவராக இருக்க வேண்டும் என்ற பழைய மூட நம்பிக்கைகளை மாற்றவும் இந்தச் சீர்திருத்தம் உதவும் என்றும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்ற னர்.
குடும்ப சிவில் சட்டங்கள் சீர்திருத்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அனைத்துலக அளவில் மேஜராவ தற்கான வயது வரம்பு 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்-பெண் இடையே திருமண வயதில் வேறுபாடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.