தமிழக சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஐந்து மாதங்களில் ரூ.20 கோடிக்கும் அதிகமாக லஞ்சம் பெற்றுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு வருமான வரித்துறை பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து, அவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வரு கின்றன. அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பல புகார்கள் வந்ததையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி சென்னையில் அவர் வசித்து வரும் வீடு, புதுக்கோட்டையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, ஆர்கே நகர் இடைத் தேர்தலில் ரூ.89 கோடியை யார் யார் மூலம் வாக்காளர்களுக்கு வழங்குவது என்ற கணக்குப் பட்டியல், கணக்கில் வராத ரொக்கம், ஏராளமான ஆவணங் கள் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டன. அதன்பின் அமைச்சருக் கும் அவரின் குடும்பத்தாருக்கும் அழைப்பாணை அனுப்பி வரச் செய்து, அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.