கேரளாவில் தலைவிரித்தாடும் எலிக்காய்ச்சல்; 23 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரள மாநி லத்தை மழையும் வெள்ளமும் புரட்டிப் போட்டுள்ள நிலையில் அங்கு எலிக்காய்ச்சல் தலை விரித்தாடுகிறது. மழை, வெள்ளத்தில் எலி மூலம் பரவும் காய்ச்சலுக்கு கடந்த ஐந்து நாட்களில் 23 பேர் மாண்டுவிட்டனர். இதையடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை, மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. கேரளாவில் அண்மையில் நூறு ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பெய்த மழையினால் அம்மாநிலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி யிருக்கிறது. கேரளாவில் உள்ள 14 மாவட் டங்களில் 12 மாவட்டங்கள் வெள் ளத்தில் மூழ்கின. மழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு களால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

பல ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதுதவிர கன மழைக்கு அம் மாநிலத்தில் 476 பேர் வரை இறந்துவிட்டனர். தற்போது வெள்ளம் வடிந்த சூழலில் மக்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். மீட்புப் பணிகள் முடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. மக்கள் வீடு களைச் சுத்தம் செய்து தங்கள் வழக்கமான பணிகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அங்கு தற்போது தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு எனப் பல மாவட்டங்களிலும் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்துப் பலர் இறந்துவிட்டனர். கோழிக்கோடு அருகே கரத்தூர் பகுதியில் நேற்று காலை இதற்கு இருவர் உயிரி ழந்தனர். எலிக்காய்ச்சலில் கடந்த 5 நாட்களில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித் துள்ளதாக கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 150 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!