சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் அழகி ஸாரா

சிங்கப்பூரின் ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகியாக நேற்று முன்தினம் தேர்ந்தெடுக்கப்பட்ட 23 வயது ஸாரா கனும் டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து கலந்துகொள்ள இருக் கிறார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில் பட்டம் பெற்ற அவர், போட்டியில் பங்கேற்ற மற்ற 14 பேரையும் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.

முதல் பரிசாக $10,000 ரொக்கமும் $45,000 மதிப்பிலான இதர பரிசு களும் அவருக்கு வழங்கப்பட்டன. தாயாரால் வளர்க்கப்பட்ட ஸாரா, தமது வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். தமக்குத் தொடர்ந்து ஆதரவாக இருந்துவரும் தாயாரை இந்த வெற்றியின் மூலம் பெருமைப்படுத்தியிருப்பது தமது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி இருப்பதாகவும் கூறினார். இரண்டாம் இடத்தை 23 வயது டியோங் கியா என்னும் மூன்றாம் இடத்தை 26 வயது ஜாஸ்லின் டானும் பிடித்தனர். அவர்களுக்குத் தலா $5,000, $3,000 ரொக்கம் பரிசளிக் கப்பட்டது.

இறுதிச் சுற்றில் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்துகொண் டனர். சிங்கப்பூர் ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியின் தேசிய இயக்குநர் நுரலிஸா ஒஸ்மான், தி நியூ பேப்பர் நாளிதழின் ஆசிரியர் யூஜின் வீ ஆகியோர் உள்ளிட்ட எழுவர் இறுதிச் சுற்றின் நீதிபதிகளாக இருந்தனர். சிங்கப்பூர் ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டி ஏற்பாட்டாளர்களுடன் சேர்ந்து தி நியூ பேப்பர் நாளிதழ் இந்தப் போட்டியை நடத்தியது. போட்டியாளர்கள் அனைவரும் அழகையும் ஆளுமையையும் வெவ் வேறு விதங்களில் அற்புதமாக வெளிப் படுத்தியதால் வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமமா னதாக இருந்தது என்று குறிப்பிட்ட திரு வீ, “ஸாராவின் தன்னம்பிக்கை, நிதானம், தனித்தன்மை அவரை வெற்றியாளராக மிளிரச்செய்தது,” என்று கூறினார்.

சிங்கப்பூர் ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகியாக வெற்றிவாகை சூடிய ஸாரா கனும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் தேதி தாய்லாந்தில் நடைபெற உள்ள ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதிப்பார். நேற்று முன்தினம் ஒன் ஃபேரர் ஹோட்டலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வென்ற ஸாரா கனும் உடன் அவரது தாயார் ரஹட் பானோ, தம்பி கெய்ஸ`ர் பாபா. படம்: தி நியூ பேப்பர்