You are here

அன்வார் போட்டியிட மூன்று நாடாளுமன்ற தொகுதிகள் தேர்வு

மலேசியாவின் அடுத்த பிரதமராக பதவி ஏற்க இருப்பவர் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் அன்வார் இப்ராகிம் நாடாளுமன் றத்துக்குத் தேர்ந்து எடுக்கப் படுவதைச் சாத்தியமாக்கும் வகை யில் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் தான் போட்டியிட போகும் தொகுதி பற்றி இதுவரை அன்வார் வாய் திறக்கவில்லை. “எந்தவித முடிவும் எடுக்க வில்லை. அதனால் போட்டியிடும் தொகுதி பற்றி தற்போது தெரி விக்க முடியவில்லை,” என்றார் அன்வார் இப்ராகிம். “இப்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் வரை எனக்காகத் தொகுதியை விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளனர். ஆனால் எனக்கு ஏற்ற இடம் எது என்பதை முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. என்னை வாக்காளர்களும் ஏற்றுக்கொள் வார்களா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது,” என்றும் அன் வார் தெரிவித்தார். பினாங்கில் நேற்று கெஅடி லான் ரக்யாட் கட்சியின் பொதுக் கூட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். முன்னதாக வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத் துக்கு திரும்ப அன்வார் விருப்பம் தெரிவித்திருந்தார்.

“மலேசியாவின் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி, அப்போது 11வது மலேசிய திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அந்தத் திட்டம் தொடர் பான என்னுடைய கருத்துகளை மன்றத்தில் முன்வைக்கலாம் என்று நம்புகிறேன்,” என அன் வார் குறிப்பிட்டார். பூமிபுத்ராக்களின் எதிர்காலம் மற்றும் நாட்டு முன்னேற்றம் 2018 நிகழ்ச்சியின் முடிவில் சனிக் கிழமை பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.