வடிவமைப்பு, கட்டுமானம், பொறியியல் சாதனைகளுக்கு முன்னுதாரணமாய் விளங்கும் 31 கட்டடங்களின் பெயர்கள் நேற்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தால் அறிவிக்கப்பட்டன. அவற்றுள் மாறுபட்ட கட்டடக் கலை அம்சங்கள் கொண்ட பொங்கோல் வாட்டர்வே வியூவில் அமைந்த பிடிஓ வீடுகளுக்குச் சிறந்த வடிவமைப்பு விருது கிடைத்தது. பொங்கோல் வட்டாரம் அதன் தொடக்கக் காலத்தில் 'கேலோங்' எனப்படும் மீன்பிடி கிராமமாக இருந்ததை நினைவூட்டும் வகை யில் அங்குக் கட்டப்பட்டிருக்கும் பத்து கட்டடங்களின் நிறம் மரத்தாலானது போன்றும் மரக்கம் பங்களுக்கு ஒத்த தூண்கள் கட்டடங்களின் வெளிப்புறத் தளங் களிலும் அமைந்துள்ளன. அதேபோல் டெப்போ ஹைட்ஸ் வீவக வீடுகளுக்கும் சிறந்த வடிவமைப்புக்கான விருது அளிக்கப்பட்டது.
அண்மையில் தம் தேசிய தினப் பேருரையின்போது பிரதமர் லீ பாராட்டித் தள்ளிய கம்போங் அட்மிரல்டி வடிவமைப்பு, கட் டுமானம் ஆகிய இரு பிரிவுகளிலும் விருதுகள் வென்றது. வித்தியாசமான, அடுக்கு வடிவமைப்பு பாணியில் அமைந்த கம்போங் அட்மிரல்டி கட்டடங்களில் அமைந்த பசுமையான பகுதிகள் சமூக நிகழ்வுகளுக்கும் இரட்டித்துப் பயன்படக்கூடியதாக விளங்குவது குறிப்பிடத்தக்கது என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன் அறிக்கையில் கூறியது. தரமான வேலைப்பாடு கொண் டதற்காக இதற்கு மிக உயரிய கட்டுமான விருது அளிக்கப்பட்டது. இவற்றுடன் புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் அமைந்துள்ள 'ஸ்கைபீக்' வீவக திட்டத்திற்கும் கட்டுமான விருது வழங்கப்பட்டது.
'கேலோங்' வடிவில் அமைந்த பொங்கோல் வாட்டர்வே வியூ குடியிருப்பில் உள்ள பிடிஓ கட்டடங்கள். படம்: சாவ் பாவ்