காதலரை மணந்தார் சுவாதி

பிரபல நடிகை சுவாதி தனது காதலரைக் கரம்பிடித்துள்ளார். தனியார் விமான நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றும் விகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர். இரு வீட்டாரும் சம்மதித்ததை அடுத்து இருவருக்கும் கடந்த வியாழக்கிழமை ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று கொச்சியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப் பாக நடந்தேறியது. விகாஸ் இந்தோ னீசியாவில் வசிக்கிறார். மிக விரை வில் கணவருடன் ஜகார்த்தாவில் குடியேற உள்ளார் சுவாதி. ‘சுப்ரமணியபுரம்’ படம் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானவர் சுவாதி. தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டு களைப் பெற்றார். திருமணமானதையடுத்து சுவா திக்கு திரையுலக நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆர்யா, சாயிஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் ‘டெடி’ படத்தில் சாக்‌ஷியும் இணைந்துள்ளார்.

17 Oct 2019

பின்னணிக் குரல் கொடுத்த சாக்‌ஷி

‘டிரிப்’ என்ற படத்தில் பார்த்தாலே மிரளவைக்கும் ஒரு நாயுடன் நடித்துவருகிறார் சுனைனா.

17 Oct 2019

சுனைனாவின் தைரியத்தைப் பாராட்டிய ரசிகர்கள்

நிகிஷாவைப் பொறுத்தவரை சேலை தான் மிகக் கவர்ச்சியான உடையாம். அந்தக் கவர்ச்சியை வேறு எந்த உடையிலும் எதிர்பார்க்க முடியாது என்கிறார். படம்: ஊடகம்

17 Oct 2019

நிகிஷா: சேலைதான் கவர்ச்சி