You are here

சீனாவின் வர்த்தக இணைப்புப் பாதை திட்டத்தால் நாடுகள் கடனில் மூழ்கும் அபாயம்

பெய்ஜிங்: சீனாவின் பெருந் திட்டமான வர்த்தக இணைப்புப் பாதையில் இடம்பெற்றுள்ள நாடு கள் சீனாவிடம் கடனில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரி வித்துள்ளன. கடந்த 2013ஆம் ஆண்டில் அந்தப் பெருந்திட்டத்தைச் சீன அதிபர் ஸி ஜின்பிங் அறிவித் திருந்தார். புதிய ‘சில்க் ரோடு’ என்றும் அழைக்கப்படும் அந்த திட்டத்தின் மூலம் உலக முழுவதும் ரயில்வே கட்டுமானப்பணி, சாலை, துறை முகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்று அதிபர் ஸி கூறியிருந்தார். இதன் ஒரு பகுதியாக பல நாடுகளுக்கு பல பில்லியன் டாலர் கடன் வழங்கப்படும் என்றும் சீனா அறிவித்திருந்தது. இந்தப் பெருந் திட்டம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் சீனாவின் கடன் வலையில் சிக்கும் அபாயமுள்ளதாக பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ஆனால் இதனை மறுத்துள்ள சீன அதிபர், “அது, சீனாவின் மன்றம் அல்ல” என்றார்.

பெருந்திட்டத்தின் ஆண்டு விழாவை இன்று சீனா கொண் டாடும் வேளையில் சீன அதிபர் ஸி ஜின்பிங் அதனை தற்காத்துப் பேசியுள்ளார். “சீனாவின் வர்த்தக இணைப்புப் பாதை வெளிப்படை யான, அனைவரையும் உள்ளடக் கிய திட்டம்,” என்றும் அவர் குறிப் பிட்டார். “வர்த்தகப் பாதையில் இணைந் துள்ள நாடுகளுடனான சீனாவின் வர்த்தகம் ஐந்து டிரில்லியன் அமெ ரிக்கா டாலரையும் தாண்டியுள்ளது. இதில் நேரடி முதலீடு மட்டும் 60 பில்லியன் டாலரையும் தாண்டி விட்டது,” என்று அதிபர் ஸி சொன்னார். இருப்பினும் சில நாடுகள் செலவுக்கு ஏற்ற மதிப்புமிக்க திட்டமா என்று சந்தேகம் எழுப்பி யுள்ளன. கடந்த மாதம் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட மலேசிய பிரதமர் மகாதீர் முகமது, இருபது பில்லியன் டாலர் மதிப்புள்ள ரயில்வே திட்டம் உட்பட சீன ஆதரவில் மேற்கொள்ளப்பட விருந்த மூன்று திட்டங்களும் கைவிடப்படுவதாக அறிவித்தார்.