You are here

ரயில், பேருந்து கட்டணம் 4.3% வரை உயரலாம்

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு பேருந்து, ரயில் கட்டணம் 4.3% வரை அதிகரிக் கக்கூடும். பொதுப் போக்குவரத்துக் கட்டண வழிமுறையை மறுபரிசீலனை செய்வதில் இடம்பெறும் ஒரு புதிய அம்சம் காரணமாக இந்த உயர்வு சாத் தியமாகிறது. பொதுப் போக்குவரத்து மன்றம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 2018 போக்குவரத்துக் கட்டண மறு பரிசீலனையில் பொதுப் போக்குவரத்து கட்டமைப்புக் கொள்ளளவு அம்சமும் கருத்தில் கொள்ளப்படும் என்று மன்றம் தெரிவித்துள்ளது. இந்த மன்றம் தொடங்கியிருக்கும் 2018 கட்டண மறுபரிசீலனை, ஒரு புதிய வழிமுறையின் அடிப்படையில் இடம்பெறுகிறது. அந்த வழிமுறை பயனீட்டாளரின் தேவையையும் பொதுப் போக்குவரத்துக் கொள்ளளவில் இடம் பெறும் வளர்ச்சி, மேம்பாடுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. பேருந்து, ரயில் ஆகியவற்றின் உண் மையான பயனீடு தொடர்பில் அந்தப் போக்குவரத்துகளின் கொள்ளளவு எந்த அளவுக்கு மாற்றம் அடைந்து இருக்கிறது என்பதை இந்தப் புதிய அம்சம் கணக்கிடுகிறது.

கட்டமைப்புக் கொள்ளளவு அம்சத் தைப் பார்க்கையில், அது பயணிகளின் அளவு, கொள்ளளவின் அளவிற்கு இல்லை என்பதைப் புலப்படுத்துகிறது. இது மறுபரிசீலனையில் 3% உயர்வுக்கு வழிவகுப்பதாகவும் மன்றம் தெரிவித்து உள்ளது. சம்பள உயர்வு, எரிபொருள் விலை, மூலாதார பயனீட்டாளர் விலைப்பட்டியல் ஆகியவற்றை எல்லாம் சேர்த்து கணக் கிடும்போது, புதிய பரிசீலனை வழிமுறை மூலம் 7.5% கட்டண உயர்வுக்கு இட முள்ளது.