You are here

பொய்ச் செய்தி, இணைய மோசடியை எதிர்கொள்ள மாணவர்களுக்கான பயிலரங்கு

பொய்யான செய்தி, இணைய மோசடி தொடர்பில் மாணவர் களிடையே விழிப்புணர்வை அதி கரிக்க ‘மீடியா லிட்டரசி கவுன்சில்’ நேற்று பயிலரங்கு ஒன்றை ஏற்று நடத்தியது. போன விஸ்தாவில் அமைந்து உள்ள பிக்சல் கட்டடத்தில் ஐந்து உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 13 மாணவர்கள் பங்கேற்ற இந்தப் பயிலரங்கில் பொய்ச் செய்தி களையும் பொதுவான இணைய மோசடிகளையும் அடையாளம் காண்பதுடன் இணையம் வழி கிண்டல் சம்பவங்களைக் கையாள வும் அவர்கள் கற்றுக்கொண்ட னர். இணையத்தில் வலம்வரும் செய்தியின் தலைப்பு மிகைப்படுத் தப் பட்டுள்ளதா, அதே செய்தி பல்வே று நம்பகமான ஊடகங்களில் வெளிவந்துள்ளதா என்பதை சரி பார்க்க மாணவர்கள் ஆலோசனை பெற்றனர்.

கிரீன்டேல் உயர்நிலைப் பள்ளி யில் பயிலும் 13 வயது ஆல்பர்ட் லோ, தமது பாட்டியின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டு அவருக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்பு கள் வருவதாகக் கூறினார்.