‘தமிழ் வாழ அனைவரும் கைகோப்போம்’

ப. பாலசுப்பிரமணியம்

சிங்கப்பூரில் தமிழ் மொழி வாழும் மொழியாக நிலைத்திருக்க அர சாங்கம், சமூக அமைப்புகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கைகோக்கவேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் அறைகூவல் விடுத்து இருக்கிறார். ஒரு மொழி வாழவும் செழிக்க வும் அம்மொழியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி உயிர்ப்புடன் வைத்திருக்க வேண் டும் என்றும் அதற்குச் சமூகமும் கைகொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் நேற்றுத் தொடங்கிய இரண்டு நாள் உலகத் தமிழாசிரியர் மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற் றியபோது திரு சண்முகம் இவ் வாறு தெரிவித்தார்.

12வது முறையாக நடக்கும் இம்மாநாடு சிங்கப்பூரில் நடை பெறுவது இது நான்காம் முறை. நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற் காக இந்தியா, அமெரிக்கா, மலேசியா, இலங்கை, தென்னாப் பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 400 பேரா ளர்கள் வருகைபுரிந்துள்ளனர். ‘பன்மொழிச் சூழலில் தமிழ் மொழி கற்றல், கற்பித்தல்’ எனும் கருப்பொருளுடன் கூடிய இந்த மாநாட்டை சிங்கப்பூர்த் தமிழாசிரி யர் சங்கம், உலகத் தமிழாசிரியர் பேரவை, சிங்கப்பூர் சமூக அறி வியல் பல்கலைக்கழகம் ஆகி யவை இணைந்து நடத்துகின்றன.

சிறப்பு விருந்தினர் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகத்திற்கு மாலை அணிவித்துக் கௌரவிக்கும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் சி.சாமிக்கண்ணு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இரவு உணவுக்காக அறையில் இருந்த குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கக் கதவைத் தட்டிய நண்பர், மூவரும் நினைவிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டார். படங்கள்: ஷின் மின் நாளிதழ், பேங்காக் போஸ்ட்

13 Dec 2019

தாய்லாந்து விடுதியில் எரிவாயு கசிவு: நினைவிழந்த நிலையில் கிடந்த சிங்கப்பூர் குடும்பம்

இவ்வாண்டின் 11 மாதங்களில் 48 சம்பவங்களில் பாதி உள்ளிருந்து வெளியே தள்ளித் திறக்கப்படும் சன்னல்கள் தொடர்பானவை என்று தெரிவித்த இவ்விரு அமைப்புகள், இதற்கு முக்கிய காரணம் அவற்றின் துருபிடித்த ஆணிகளே என்பதையும் சுட்டின. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Dec 2019

பராமரிப்பு குறைபாட்டால் சன்னல் விழுந்தால் வீட்டு உரிமையாளருக்கு சிறை

காசோலைகள் எங்கிருந்து வந்தன, எப்படி வந்தன என்பது பற்றியும் இந்த இந்த மோசடி பற்றியும் நாதனுக்கு எதுவும் தெரியாது என நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Dec 2019

‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ மோசடியில் உதவிய மலேசிய இந்தியருக்கு 39 மாத சிறை