சுடச் சுடச் செய்திகள்

இறுதிச் சுற்றில் மோதும் செரீனா, ஒசாக்கா

நியூயார்க்: அமெரிக்கப் பொது விருது டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு அந்நாட்டின் செரீனா வில்லியம்சும் ஜப்பானின் நவோமி ஒசாக்காவும் தகுதி பெற்றுள்ளனர். கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் முதல் ஜப்பானிய வீராங்கனை எனும் பெருமை ஒசாக்காவைச் சேரும். நேற்று நடைபெற்ற பெண் களுக்கான அரையிறுதியில் லாட்வியாவின் செவாஸ்டோ வாவை செரீனா 6=3, 6=0 எனும் நேர்செட் கணக்கில் வீழ்த்தினார். மற்றோர் அரையிறுதிப் போட்டி யில் அமெரிக்காவின் மெடிசன் கெய்சும் ஜப்பானின் நவோமி ஒசாக்காவும் மோதினர். இந்தப் போட்டியில், 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மெடிசன் கெய்சை வீழ்த்தி இறுதிப் போட் டிக்குள் நுழைந்தார் ஒசாக்கா.