You are here

சூறாவளி தாக்கும் அபாயத்தை எதிர்நோக்குகிறது அமெரிக்கா

கெரோலைன: அமெரிக்காவின் தென் கெரோலைனவை சூறாவளி தாக்கலாம் என்ற அச்சம் காரணமாக கரையோரங் களில் வாழும் கிட்டத்தட்ட ஒரு மில்லி யன் மக்களை வெளியேறுமாறு அதி காரிகள் உத்தரவிட்டுள்ளனர். ‘ஃபுளோரன்ஸ்’ என்ற அந்த சூறாவளி மணிக்கு 220 கிலோ மிட்டர் வேகத்தில் தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபுளோரன்ஸ் சூறாவளி காரண மாக முன் எப்போதும் இல்லாத அளவி ற்கு இழப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகின்றது. கடும் காற்று வீசுவதுடன் கடும் மழை பெய்யக்கூடும் என்பதால் வெள்ளப்பெருக்குகளும் ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த சூறாவளி வியாழக்கிழமை கரையைக் கடக்கக்கூடும் என அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம் முன்னுரைத்துள்ளது. மிக வலுவான சூறாவளியாக ஃபுளோரன்ஸ் கருதப்படுகிறது. அத னை எதனாலும் தடுக்க முடியாது எனத் தென் கெரோலைனவின் ஆளு நர் ஹென்றி மெக்மாஸ்டர் தெரிவித்து உள்ளார்.

அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து அமெரிக்காவின் கிழக்கு கரையோரப் பகுதியை நோக்கிச் செல்லும் ‘ஃபுளோரன்ஸ்’ சூறாவளி, அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து புகைப்படம் எடுக்கப்பட்டது. படம்: நாசா