You are here

ஆஸ்திரேலியாவில் வெல்ல மனநிலை முக்கியம் - கில்கிறிஸ்ட்

மெல்பர்ன்: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரை வெல்ல உடல்நிலையை விட மனநிலை முக்கியமானது என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட்காப்பாளர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி உள்ளூர் தொடரைச் சிறப்பாக முடித்துக்கொண்டு தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தது. இந்த இரண் டிலும் தொடர்களை இழந்து உள்ளது. விராத் கோஹ்லி தலைமை யிலான இந்திய அணி வெளி நாட்டு மண்ணில் சாதிக்க அதிக அளவில் வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால் இரண் டில் தோல்வி அடைந்துள்ள நிலையில், இன்னும் ஆஸ்தி ரேலியத் தொடர் மட்டுமே மீதம் உள்ளது. இந்நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல வேண்டும் என்றால், உடற்தகுதியைவிட மனவலிமை அதிகமாக இருக்க வேண்டும் என்று கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.