You are here

சீறிப் பாய்ந்த போர்ச்சுகல்; பதுங்கிய இத்தாலி

லிஸ்பன்: நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இத்தாலியை 1=0 எனும் கோல் கணக்கில் வீழ்த் தியது போர்ச்சுகல். அணித் தலைவர் கிறிஸ்டி யானோ ரொனால்டோ களமிறங் காத போதிலும் போர்ச்சுகல் அதிரடியாக விளையாடியது. போர்ச்சுகலின் தொடர் தாக்கு தல்களைச் சமாளிக்க முடியாமல் இத்தாலி வீரர்கள் திக்குமுக் காடினர். இந்த ஆட்டத்திற்காகத் தமது குழுவில் பல மாற்றங்களைச் செய்திருந்தார் இத்தாலியின் பயிற்றுவிப்பாளர் ரொபெர்ட்டோ மன்சினி. போர்ச்சுகலின் நட்சத்திரப் பட்டாளம் வெளிப்படுத்திய மின்னல் வேக ஆட்டத்துக்கு பதிலடி கொடுக்க முடியாமல் இத்தாலியின் இளம் வீரர்கள் தவித்தனர். பிற்பாதி ஆட்டத்தில் போர்ச் சுகல் கோல் போடாதபடி ஒருவழி யாகப் பார்த்துக்கொண்ட இத்தாலி வீரர்கள், பிற்பாதியில் போர்ச்சு கலிடம் சரணடைந்தனர். பிற்பாதி ஆட்டம் தொடங்கி மூன்று நிமிடங்களில் போர்ச்சு கலின் ஆண்ட்ரே சில்வா அனுப்பிய பந்து, அழகாக வளைந்து சென்று வலையைத் தொட்டது. பந்தைப் பிடிக்க இத்தாலி கோல்காப்பாளர் பாய்ந்தபோதும் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து, போர்ச்சுகல் பல தாக்குதல்களை நடத்தியது. கோல் போட கிடைத்த சில பொன்னான வாய்ப்புகளை போர்ச்சகல் நழுவவிட்டது.

பந்தை நோக்கி விரையும் போர்ச்சுகலின் ஆண்ட்ரே சில்வா (வலது). அவரது கோல் முயற்சியைத் தடுக்கப் பாயும் இத்தாலியின் கோல்காப்பாளர் ஜியான்லியூகி டொன்னாரும்மா. படம்: ஏஎஃப்பி