ஃபிஜியை வீழ்த்திய ஃபாண்டியின் படை

நட்புமுறை காற்பந்து ஆட்டத்தில் ஃபிஜிக்கு எதிராக சிங்கப்பூர் நேற்றிரவு களமிறங்கியது. இந்த ஆட்டம் பீஷான் விளையாட்டரங் கத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் சிங்கப்பூருக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் வந்த பந்தைத் தலையால் முட்டி வலைக்குள் அனுப்பினார் சிங்கப்பூரின் அணித் தலைவர் ஹாரிஸ் ஹருண். விளையாட்டரங்கத்தில் கூடியி ருந்த ரசிகர்களின் கொண்டாட்டம் தணிவதற்குள் அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் சிங்கப்பூரின் இரண்டாவது கோல் புகுந்தது. இம்முறை தாக்குதல் ஆட்டக் காரரும் இடைக்காலப் பயிற்று விப்பாளர் ஃபாண்டி அகமதின் மகனுமான இக்சான் ஃபாண்டி கோல் போட்டு சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, ஃபிஜி ஆட்டத்தில் தீவிரம் காட்டத் தொடங்கியது.

ஃபிஜி ஆட்டக்காரர்களின் மின்னல் வேகத் தாக்குதல்கள் சிங்கப்பூர் குழுவுக்குச் சற்று சிரமத்தைக் கொடுத்தது. இருப்பினும், ஃபிஜி ஆட்டக் காரர்களால் கோல் போட முடியாமல் போக, முற்பாதி ஆட்டம் 2=0 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூருக்குச் சாதகமாக முடிந்தது. பிற்பாதி ஆட்டத்தில் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. கூடுதல் கோல்கள் போடும் வேட்கையில் சிங்கப்பூர் வீரர்களும் ஆட்டத்தைச் சமன் செய்யும் முனைப்பில் ஃபிஜி வீரர்களும் முட்டி மோதினர். ஆட்டம் முடிய கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் இருந்தபோது தப்பாட்டம் காரணமாக ஃபிஜி ஆட்டக்காரருக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத் திலிருந்து வெளியேறறப்பட்டார். ஃபிஜியால் இறுதி வரை சிங்கப்பூருக்குப் பதிலடி கொடுக்க முடியாமல் போக, ஆட்டத்தை 2-0 என சிங்கப்பூர் கைப்பற்றியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!