You are here

குற்றவியல் நீதிமன்றத்துக்குத் தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா அச்சுறுத்தல்

வா‌ஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் அமெரிக்க ராணுவ வீரர்கள் போர் குற்றங்கள் புரிந்த தாக கூறி அவர்கள் மீது குற்றம் சுமத்தினால் அனைத்துலக குற்ற வியல் நீதிமன்றத்துக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டவர்களைத் துன்புறுத் தி யதன் தொடர்பில் அமெரிக்க ராணுவ வீரர்களை விசாரித்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அந்நீதிமன்றம் எண்ணம் கொண்டுள்ளது. நீதிமன்றத்தின் யோசனை அமெரிக்க இறையாண்மைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் மிரட்டல் என அமெரிக்க வெள்ளை மாளி கை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவி த்துள்ளார்.

“இந்த நீதிமன்றம் சட்டவிரோத மானது என்றும் எங்கள் குடிமக்க ளைப் பாதுகாக்க எது வேண்டு மானலும் செய்வோம்,” என அவர் திட்டவட்டமாக கூறினார். 2002ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட அந்த நீதிமன்றத்தில் சேராம ல் இருக்கும் பல நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. நீண்டகாலமாகவே அனைத் துலக குற்றவியல் நீதிமன்றத்தை விமர்சித்து வருபவர் போல்டன். அவ்வகையில் அவர் நேற்று முன் தினம் இரண்டு அம்சங்கள் குறித்து பேசினார். ஒன்று, நீதிமன்றத்தின் விசார ணையாளரான ஃப்டூ பென்சூடாவி ன் கோரிக்கையின் படி ஆப்கானிஸ் தானில் நடைபெற்ற போர்க் குற்றங் கள் குறித்து விசாரிப்பது என்பது. அதில் எந்த ஒரு அமெரிக்க ராணுவ வீரரும் உளவுத்துறை அதிகாரியும் விசா ரிக்கப்படக் கூடும்.