You are here

சாபா மாநிலத்தில் இரு இந்தோனீசிய மீனவர்கள் கடத்தல்

கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் இந் தோனீசியாவைச் சேர்ந்த இரு மீன வர்கள் கடத்தப்பட்டு உள்ளனர். செம்பொர்னா நகருக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் ஆயுதம் ஏந்திய ஆடவர்கள் அவர்களைக் கடத்தி யதாகத் தகவல் வெளியானது. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடிப் படகில் நான்கு பேர் இருந்த தாக தி ஸ்டார் நாளிதழ் தெரிவி த்தது. கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிச் சென்ற ஒருவர் காவல்துறையிடம் சம்பவம் குறித்து தகவல் அளித்து உள்ளார். ஆள்கடத்தலுக்கு முன்னதாகப் படகின் இயந்திரம் செயலிழக்கச் செய் யப்பட்டதாகவும் மின்சாரம் துண்டிக்கப்ப ட்டதாகவும் அவர் கூறினார். முகமூடி அணிந்த இரண்டு ஆட வர்கள் கையில் ஆயுதங்களோடு படகில் ஏறியதைப் படகின் முன் புறத்தில் மறைந்துகொண்டவாறு தாம் கண்டதாக அவர் சொன்னார்.

கடத்தப்பட்டவர்களை விடுவிக்க, பிணை தொகை வழங்குவது குறித்து எந்த அழைப்பும் இதுவரை கிடைக்க வில்லை என்று காவல்துறை தெரி வித்தது. பிலிப்பீன்சில் பயன்படுத்தப்படும் சுலூக் எனும் மொழியைக் கடத்தல் காரர்கள் பேசியதாகவும் தகவல் வெளியானது. சாபாவில் கடந்த ஈராண்டில் நடந்து உள்ள முதல் ஆள்கடத்தல் சம்பவம் இது.