You are here

மூன்று மாதங்களுக்கு முன் திறந்துவைத்த பாலம் இடிந்தது

மத்தியப்பிரதேச மாநிலம், சிவ்புரி மாவட்டத்தில் உள்ள போக்ரி டெசில் பகுதியில் குனோ ஆற்றின் மீது ரூ.7.78 கோடி செலவில் கட்டப்பட்டிருந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. புதிதாகக் கட்டப்பட்ட இந்தப் பாலத்தை மூன்று மாதங்களுக்கு முன்புதான் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திறந்துவைத்தார். மாநிலத்தின் ‌ஷிவ்புரி, ‌ஷியோபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் குனோ, சம்பால் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மத்தியப்பிரதேசத்தையும் ராஜஸ்தானையும் இணைக்கும் இந்தப் பாலம் இடிந்து விழுந்ததால் மக்கள் தன்னை குற்றம்சாட்டுவதாகத் தெரிவித்துள்ள அப்பகுதி எம்எல்ஏ பிரகலாத் பார்தி, பாலத்தின் மீது 4 அடி உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்ததாலேயே பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறியுள்ளார். படம்: ஊடகம்