You are here

பிரியா: நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன

தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாத நிலையில் மலையாளக் கரையோரம் ஒதுங்கியுள்ளார் பிரியா ஆனந்த். அங்கு அவர் நடிப்பில் வெளியான ‘எஸ்றா’ என்ற படம் விமர்சன, வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள்ளது. பிருத்விராஜ் ஜோடியாக இப்படத்தில் பிரியா நடித்துள்ள நிலையில், மலையாளத்தில் மேலும் பல வாய்ப்பு கள் தேடி வருகின்றனவாம். இதையடுத்து திலீப் ஜோடியாக மற்றொரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் பிரியா. இப்படத்தை மோகன்லாலின் நண்பரான உன்னிகிருஷ்ணன் என்பவர் இயக்குகிறார். இதற்கிடையே மோகன்லால், ஆனந்த் நிவின் பாலி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள ‘காயன்குளம் கொச்சுண்ணி’ படம் விரைவில் வெளியாக இருப்பதால் பிரியா உற்சாகத்தில் மிதக்கிறார். “மலையாளத்தில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறேன். எனது திறமையை வெளிப்படுத்தக்கூடிய நல்ல பாத்திரங் கள் அமைவது மகிழ்ச்சி தருகிறது,” என்கிறார் பிரியா ஆனந்த்.