You are here

சொத்துச் சந்தை நிறுவனத்திற்கு அபராதம், ஓராண்டு தடை

வெளிநாடுகளில் சொத்து வாங் குவதில் உள்ள அபாயங்களை முதலீட்டாளர்களிடம் தெரிவிக் காத ‘எச்எஸ்ஆர் இன்டர்நேஷனல் ரியால்ட்டர்ஸ் பிரைவெட் லிமி டட்’ எனும் சொத்துச் சந்தை நிறுவனத்திற்கு $12,500 அபரா தம் விதிக்கப்பட்டது. அத்துடன், இம்மாதம் 10ஆம் தேதியிலிருந்து இன்னும் ஓராண்டு காலத்திற்கு வெளிநாட்டுச் சொத்துகளைப் பரிவர்த்தனை செய்யவும் சந்தைப் படுத்தவும் அந்நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேங்காக்கில் அமையவிருந்த ‘மேன்ஹாட்டன் பார்க் பெனின் சுலர்’ எனும் கூட்டுரிமைக் குடி யிருப்புத் திட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு முதலீட்டாளர் கள் இருவர் ‘எச்எஸ்ஆர்’ நிறு வனம் மூலம் வீடு வாங்கினர்.

இருவரும் முன்பணமாக $3,000 செலுத்தினர். விற்பனை, கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டபின் வீட்டு விலையில் 30 விழுக்காட்டையும் அவர்கள் செலுத்தினர். பின்னர் அந்த வீடமைப்புத் திட்டம் கைவிடப்பட்டுவிட்டதாக வும் அதற்குப் பதிலாக வேறு வீட மைப்புத் திட்டங்களில் வீடு ஒதுக் கத் தயாராகவுள்ளதாகவும் அவ் விருவரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் அதற்கு இணக்கம் தெரிவித்தார்; மற்றொ ருவர் உடன்படவில்லை. தான் கொடுத்த பணமும் திருப்பித் தரப்படாததால் அவர் சொத்து முகவை மன்றத்தை நாடினார். புகாரை விசாரித்த மன்றம், வழிகாட்டி நெறிமுறைகள் மீறல் தொடர்பில் ‘எச்எஸ்ஆர்’ மீதான இரு குற்றச்சாட்டுகள் நிரூபிக் கப்பட்டதாகத் தெரிவித்தது.