You are here

வர்த்தகப் போரால் சீனாவில் வேலையின்மை பெருகக்கூடும்

ஹனோய்: சில நாடுகளின் தன்னைப்பேணித்தனம் உலகப் பொருளியல் வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நேற்று வியட்நாமில் நடைபெற்ற உலகப் பொருளியல் கருத்தரங்கில் சீனா தெரிவித்தது. சீனாவிலிருந்து அமெரிக்கா வுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மீதும் வரி விதிக்கப்போவதாகக் கடந்த வாரம் அமெரிக்கா அச்சுறுத்தியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் உச்சத்தை எட்டியது. அதிபர் டிரம்பின் பெயரையோ அமெரிக்காவின் பெயரையோ குறிப்பிடாமல் சீனாவின் துணை அதிபர் ஹு சுன்ஹுவா சீனாவின் கருத்தை கருத்தரங்கில் வெளி யிட்டார்.

அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போரை தென்கிழக்கு ஆசிய நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்த விரிசலால், ஏற்றுமதியில் கவனம் செலுத்திவரும் சில நாடுகள் பயனடையும் வாய்ப்புகள் ஏற்படக் கூடும். அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தொடர்ந்தால் சீனாவில் சுமார் 700,000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படக்கூடும் என ஜேபிமோர்கன் நிறு வனத்தின் ஆய்வு முடிவு தெரி விக்கிறது. சீனாவின் ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா $275 பில்லியன் மதிப்பிலான வரிகள் விதிப்பதுடன், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா தனது நாணய மதிப்பைக் குறைத்து, அமெரிக்கப் பொருட்கள் மீது வரி விதித்தால் வேலையிழப்புகள் ஏற்படக்கூடும் என ஜேபிமோர்கன் சேஸ் & கோவைச் சேர்ந்த ஹைபின் ஸ`வின் தலைமையிலான பொரு ளியலாளர்கள் கருத்துரைத்து உள்ளனர்.