You are here

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கணினிப் பொறியாளர் தடுத்துவைப்பு

தீவிரவாதப் போக்குக்கு ஈர்க்கப் பட்ட தகவல் தொழில்நுட்பப் பொறியாளர் ஒருவர் உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இதனை உள்துறை அமைச்சு நேற்று அறிவித்தது. விசாரணை யில் அகமது ஹுசேன் அப்துல் காதிர் த/பெ ஷேக் உதுமான் என்ற அந்த 33 வயது ஆடவர், ஈராக் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுக்காக ஆயுதம் ஏந்திப் போராடத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இவருக்கு தீவிரவாதத்தில் ஈடுபடும் எண்ணம் 2013ஆம் ஆண் டில் ஏற்பட்டது.

தீவிரவாதம் குறித்த தகவல்களை இணையம் வழி அவர் அறிந்து கொண்டார். அத்துடன் அல்--காய்தா தீவிரவாதக் குழுவில் இருந்தவரும் அமெரிக்கத் தாக்குதலில் 2011ல் கொல்லப்பட்டவருமான அன்வார் அல்=அவ் லக்கி மற்றும் ஐஎஸ் ஸுக்கு ஆதரவாகச் செயல் பட்டு கைதானவர்களின் விரிவுரை களை யும் போதனைகளையும் தொடர்ந்து கேட்டு வந்தார் என உள்துறை அமைச்சு தெரிவித்தது. 2016ஆம் ஆண்டு இறுதி வாக்கில் அவர் சமயத்தின் பெயரில் வன்முறையைக் கையில் எடுப்ப தில் தவறில்லை என்ற நம் பிக் கைக்கு வந்தார்.

அதற்காக சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் நடந்துவரும் பயங்கரவாதத் தாக் குதலில் பங்குபெற்று உயிர்த் தியாகம் செய்ய வேண் டும் என்ற ஆவல் கொண்டிருந்தார். மேலும் அவர் ஐஎஸ் இயக்கத்தின் ஆதர வாளர் களுடன் சமூக ஊடகங் களில் தொடர்பு வைத்திருந்தார். அந்த இயக்கத்தின் மேம்பாடு களை உடனுக்குடன் அறிந்து கொள்வதில் முனைப்பு காட்டி னார். அத்துடன் அவருடன் தொடர்பில் இருந்த ஐஎஸ் ஆதர வாளர்களின் தீவிரவாதக் கொள் கை களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் என்றும் உள்துறை அமைச்சு தெரி வித்தது.