You are here

ஒத்திவைக்கப்பட்டது சேதுபதியின் ‘96’ பட வெளியீடு

முதல்முறையாக விஜய் சேது பதியும் திரிஷாவும் இணைந்து நடித்துள்ள ‘96’ படத்தின் வெளி யீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்துள்ளார் நடிகர் ஜனகராஜ். அமெரிக்காவில் இருந்த அவரைத் தேடிப் பிடித்து அழைத்து வந்தனராம். பகவதி பெருமாள், காளி வெங்கட், ‘ஆடுகளம்’ முருகதாஸ், தேவதர்‌ஷினி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிள்ளையார் சதுர்த்தி பண் டிகையையொட்டி விடுமுறை வரும் என்பதால் இப்படத்தை இந்த வாரமே வெளியிடுவதாக அறிவிக் கப்பட்டிருந்தது. ஆனால், சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’, சமந்தாவின் ‘யு டர்ன்’ ஆகிய இரு படங்கள் முன்பே வெளியீட்டுக்குத் தயாரானதால் ‘96’க்குப் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லையாம். இதனால் படத்தின் வெளியீட்டை அக்டோ பர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத் துள்ளனர். விஜய் சேதுபதி நடித்து முடித் துள்ள ‘சீதக்காதி’ அக்டோபர் 5ஆம் தேதி வெளியாக இருந்தது. தற்போது ‘96’ வெளியாவதால் ‘சீதக்காதி’யின் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.