You are here

எஃப்1: இழந்த வெற்றியை மீட்க வெட்டல் ஆர்வம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் ஈராண்டு களுக்கு முன்னர் பறிகொடுத்த வெற்றியை மீட்டெடுக்கும் துடிப் பில் இருக்கிறார் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல். சிங்கப்பூரின் இரவு நேர கார் பந்தயம் 11வது ஆண்டாக இவ் வாரம் தொடங்குகிறது. ஞாயிற்றுக் கிழமை இறுதிச்சுற்று நடைபெறும். இதுவரை இங்கு வெட்டல் நான்கு முறையும் பிரிட்டிஷ் வீரர் லூயிஸ் ஹேமில்டன் மூன்று முறையும் வென்று உள்ளனர். வெட்டல் ஆகக் கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு வாகை சூடினார்.

இரு வாரங்களுக்கு முன்னர் பெல்ஜியத்தில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான ஃபார்முலா ஒன் 13வது சுற்றில் வெட்டல் வென்றார். அதே வேகத்துடன் இருக்கும் அவர் சிங்கப்பூரிலும் முதலிடம் பிடிக்க இலக்கு கொண்டுள்ளார்.