You are here

தோற்றாலும் இந்தியாவுக்கு முதலிடம்

துபாய்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 4=1 என இழந்தபோதும் அனைத் துலக டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக் கிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4=1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்து 97 புள்ளிகளு டன் 5வது இடத்தில் இருந்தது. தற்போது அனைத்துலக கிரிக் கெட் மன்றம் டெஸ்ட் (ஐசிசி) அணி மற்றும் வீரர்களுக்கான தர வரிசைப் பட்டியலை வெளியிட் டுள்ளது.

அப்பட்டியலில் இங்கிலாந்து 8 புள்ளிகள் அதிகம் பெற்று (105) 4வது இடத்திற்கு முன்னேறியுள் ளது. 4வது இடத்தில் இருந்த நியூசிலாந்து (102) 5வது இடத் திற்குத் தள்ளப்பட்டது. தொடரை இழந்த இந்தியா 10 புள்ளிகளைத் தவறவிட்டது. இருப் பினும் 115 புள்ளிகளுடன் முத லிடத்தில் நீடிக்கிறது. தென் ஆப் பிரிக்கா 2வது இடத்திலும் ஆஸ் திரேலியா 3வது இடத்திலும் உள் ளன. சிறந்த பந்தடிப்பாளர்களுக்கான பட்டியலில் இந்திய அணித் தலை வர் விராத் கோஹ்லி தமது முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் அடுத்தடுத்த மூன்று இடங்களில் உள்ளனர். இதேபோல சிறந்த பந்து வீச் சாளர்களுக்கான பட்டியலில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண் டர்சன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்ரிக்காவின் ரபாடா, வெரான் பிளாண்டர் ஆகி யோர் அடுத்த இரண்டு இடங் களில் உள்ளனர். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.