You are here

ஒற்றைப் பாடலுக்கு நடனமாடும் அஞ்சலி

திரையுலகில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார் நடிகை அஞ்சலி. தான் ஏற்கும் ஒவ்வொரு கதா பாத்திரத்திலும் மிகவும் அனுபவித்து நடிப்பதாகவும் சொல் கிறார். நேற்று முன்தினம் தனது 32வது பிறந்தநாளைக் கொண்டாடியவர் தற்போது பேய்க் கதைகளில் அதிகம் நடித்து வருகிறார். “ஏன் இத்தகைய படங்களில் கவனம் செலுத்துகிறீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை திரையுலகில் ஏதேனும் ஒரு வகையில் எனது பங்களிப்பு இருக்கவேண்டும் என விரும்புகிறேன். “பேய்க் கதைகளில் நடிப்பை வெளிப்படுத்த முடிகிறது. அதனால் நடிக்கிறேன். அதுமட்டுமல்ல, தற்போது இரண்டு புதுப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி உள்ளேன். இதில் எந்த தவறும் இல்லை என்றும் கருதுகிறேன். முன்னணியில் இருக்கும்போது ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுவது பெரிய குற்றமா என்ன?” என்று கேள்வி கேட்கிறார் அஞ்சலி. 2018-09-13 06:10:00 +0800