திருப்பரங்குன்றத்தில் அமமுக படு சுறுசுறுப்பு

சென்னை: திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இன்னமும் இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வில்லை என்றாலும் அங்கு டிடிவி தினகரன் அமமுக அணி தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது. இதில் அதிமுக, திமுக என பிற கட்சிகளை முந்திக்கொண்டு சுறுசுறுப்பாக செயல்பட்டுக்கொண் டிருக்கிறார் தினகரன்.

கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி திருப்பரங் குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ் மரணமடைந்தார். இதையடுத்து அங்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறி விப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. 280,000 வாக் காளர்களும் 292 வாக்குச் சாவடி களும் உள்ள இத்தொகுதியில் அனைத்து சாவடிகளுக்கும் தலா ஐந்து பொறுப்பாளர்களை தின கரன் நியமித்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

அன்றாடம் ரூ. 1,000 சம்பளம் என்பதால் பலர் போட்டிபோட்டுக் கொண்டு வேலை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். அன்றாடம் 250 வாக்காளர்களைச் சந்திக்க வேண்டும் என்று 24 மணி நேரத் துக்கு ரூ. 500 சம்பளத்தில் பரப் புரைக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இது பற்றி கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி ஒருவர், "சாவடி வாரியாக 5 முதல்நிலைப் பொறுப் பாளர்கள் என்ற வகையில் 1,460 பேருக்கு ரூ.25,000 முன்பணம் கொடுத்து ஊக்கப்படுத்தி இருக் கிறோம்.

"தேர்தல் பணியில் எல்லா கட்சிக்காரர்களையும் சம்பளத்திற் காக ஈடுபட வைத்துள்ளோம். இப் போதே எங்களுக்கு ஒரு லட்சம் வாக்கு உறுதியாகிவிட்டது" என் றார் சிரித்த முகத்துடன். "இந்த ஏற்பாடுகளை விடுங் கள். கடைசி நேரத்தில் யாருமே எதிர்பார்க்க முடியாத, யூகிக்க முடியாத அதிரடி வேலையை எங்கள் தலைவர் காண்பிப்பார். ஆர்.கே. நகர் போலவே இங்கும் மற்ற கட்சிகளைத் தெறிக்க விட்டு வெற்றி பெறப்போவது தின கரன் நிறுத்தப்போகும் வேட்பாளர் தான்" என்றும் அவர் கூறினார். இவ்வேளையில், அதிமுகவும் நேற்று சைக்கிள் பேரணியுடன் இங்கு தன் தேர்தல் வேலைகளைத் தொடங்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!