You are here

கைதிகளின் குடும்பங்களுக்கு உதவிக்கரம்

சிறைக் கைதிகளின் சுமார் 900 குடும்பங்களுக்கு அவர்களின் செலவுகளை ஈடுகட்டும் விதத்தில் உணவுகளும் பற்றுச் சீட்டுகளும் வழங்கப்படவுள்ளன. ஒவ்வோர் அன்பளிப்புப் பையின் மதிப்பு ஐம்பது வெள்ளி. அந்த உதவிப்பொருட்களை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிப்பதில் தொண்டூழி யர்களின் முயற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

இதன் மூலம் அந்த குடும் பங்களின் மீது சமூகத்துக்கு அக்கறை உண்டு என்பதை தெரி யப்படுத்துகிறோம் என்று உள் துறை சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார். இந்த உதவிப்பொட்டலங்களை விநியோகிக்கும் முயற்சியை சிங்கப்பூர் போதைப் பொருள் எதிர்ப்புச் சங்கமும் சிங்கப்பூர் சிறைத் துறையும் கூட்டாக ஏற்று நடத்துகின்றன.

நேற்று பிற்பகலில் நடைபெற்ற மஞ்சள் நாடா சமூக உதவி திட்டத்தின் விருதளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் சண்முகம், 2010ஆம் ஆண்டிலிருந்து இந்தத் திட்டத்தின் மூலம் 900 அடித்தள தொண்டூழியர்கள் பயிற்சி பெற்று உள்ளனர் என்றும் சிறைக் கைதிகளின் 9,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரி வித்தார். தொண்டூழியர்கள் முதலில் கைதிகளின் குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் தேவை களையும் அக்கறைகளையும் அறிந்துகொள்வார்கள். அவை, நிதியுதவி முதல் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புதல், வீடமைப்பு, வேலை விவகாரங்கள் வரை இருக்கும்.