You are here

சுற்றுப்புற மாசு காரணமாக ஒவ்வாமை: 4,000 சிறுவர்கள் வெளியேற்றம்

கியேவ்: ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரைமியா, உக்ரைன் எல்லைப்பகுதியில் தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள சுற்றுப்புற மாசு காரணமாக அப்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 4,000 சிறுவர்களை அதிகாரிகள் வெளியேற்றி உள்ளனர். எல்லைக்கு இரு பக்கங்களிலும் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு மூச்சுத் திணறல், ஒவ்வாமைகள் ஏற்பட்டுள்ளன.