250 வீடுகளைக் கட்டித்தரும் ஜோயாலுக்காஸ் அறநிறுவனம்

கேரளாவில் அண்மையில் பெய்த பெருமழையால் பாதிக்கப்பட்டவர் களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் சமூகப் பணியில் இறங்கியுள்ளது ஜோயாலுக்காஸ் அறநிறுவனம். மொத்தம் ரூ.15 கோடி ($3 மில்லியன்) மதிப்பில் 250 வீடுகள் கட்டித்தர இலக்கு கொண்டுள்ள இந்தத் திட்டத்திற்கு ஜோயாலுக் காஸ் குழுமத்தின் ஊழியர்களும் சில ஆதரவாளர்களும் நிதி அளித்திருப்பதாக அந்த நிறு வனத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இவ்வாறு கட்டித்தரப்படும் வீடுகள் ஒவ்வொன்றும் சுமார் ஆறு லட்சம் ரூபாய் செலவில் ஆனதாக இருக்கும் என ஜோயா லுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸ், ஜோயாலுக் காஸ் அறநிறுவனத்தின் இயக்கு நர் திருமதி ஜோலி ஜோய் ஆகி யோர் தெரிவித்தனர். "குடியிருப்பவர்களுக்கு மகிழ்ச் சியை அளிக்கக்கூடியதாக அந்த வீடுகள் இருக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு," என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மொத்தம் 600 சதுரஅடி பரப் பளவில் இரண்டு படுக்கை அறை கள், வரவேற்புக்கூடம், உணவுக் கூடம், சமையலறை போன்றவற்றை உள் ளடக்கியதாக அமைக்கப்பட உள்ள அந்த வீடுகளுக்கு கான்கிரீட் மேற்கூரையிடப்படும். மழையால் பெரிதும் பாதிக்கப் பட்ட இடங்களில் அந்தச் சூழ லுக்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய விதத்திலான கட்டடக்கலை நிபு ணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு அவர்கள் அளிக்கும் திட்டப்படி வீடுகள் கட்டப்படும் எனவும் திரு ஜோய் ஆலுக்காஸ் குறிப்பிட்டார்.

'கேரளாவை மறுவடிவமைத்தல்' எனும் கேரள அரசின் திட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த மாபெரும் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இதன் மூலம் வெள் ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவத் திட்டமிடப்பட்டுள்ளது. மாநில முதல்வரின் அனுமதிக் காகச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தின் பணிகள் சுய நிர்வாக அமைப்புகளால் செயல் படுத்தப்படும் என திரு ஜோய் ஆலுக்காஸ் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!