You are here

செயற்கை கருத்தரிப்பு முயற்சி தோல்வி; குட்டி பாண்டா இல்லை

பெண் பாண்டா கரடி ஜியா ஜியாவை செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கும் அண்மைய முயற்சி தோல்வியடைந்ததால் குட்டி பாண்டா கரடியைக் காண இன்னமும் பொறுமையாக காத் திருக்க வேண்டிய அவசியம் ஏற் பட்டுள்ளது. ஜியா ஜியாவும் அவளுடைய ஜோடியான காய் காய்க்கும் உதவ நான்காவது முறையாக செயற்கை கருத்தரிப்பு முயற்சி மேற்கொள்ளப் பட்டது. ஆனால் பலன் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று காய் காய்க்கு 11 வயது ஆனது. செப்டம்பர் 3ஆம் தேதி ஜியா ஜியாவுக்கு 10 வயதானது. இந்த நிலையில் இரு பாண்டாக் களும் வெள்ளிக்கிழமை அன்று ஜோடியாக பிறந்த நாளைக் கொண்டாடின.

இரு பாண்டா கரடிகளும் பத்து ஆண்டு கடனுக்கு சீச்சுவானி லிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் ஆறு ஆண்டு களாக ஜியா ஜியாவும் காய் காயும் வசித்து வருகின்றன. இதற்கிடையே செயற்கை கருத் தரிப்பு முயற்சி பற்றி பேசிய சிங் கப்பூர் வனவிலங்கு காப்பகத்தின் பேச்சாளர் ஒருவர், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நான்காவது முறை யாக காய் காயும் ஜியா ஜியாவும் இனச் சேர்க்கையில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.

அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய காய் காய், ஜியா ஜியா. படம்: சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகம்