You are here

பிலிப்பீன்சில் பலரைக் கொன்ற சூறாவளி ஹாங்காங்கை புரட்டி, தென்சீனாவை பதம்பார்த்தது

இந்த ஆண்டிலேயே ஆக அதிக அசுரபலம் வாய்ந்த சூறாவளி என்று வர்ணிக்கப்படும் ‘மங்கூட்’ நேற்று பிலிப்பீன்ஸ் நாட்டை ஒரு கை பார்த்துவிட்டது. அந்த நாட்டின் வடகோடியில் இருக்கும் லூசோன் என்ற தீவை அந்தச் சூறாவளி புரட்டிப்போட்டு குறைந்தபட்சம் 30 பேரைக் கொன்றுவிட்டது. ஏராளமான மரங்கள் சாய்ந்து விட்டன. வீடுகளின் கூரைகள் பறந்துவிட்டன. பல இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. பண்ணை களிலும் வயல்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள் மூழ்கின. ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தார்கள். இவ்வளவு பாதிப்புகளை அந்தச் சூறாவளி ஏற்படுத்தினா லும் நேற்று நல்லவேளையாக அது தன்னுடைய முழு அசுர பலத்தை யும் காட்டவில்லை என்று தெரி விக்கப்பட்டது. அப்படி அந்தச் சூறாவளி வீசியிருந்தால் நிலைமை படு மோசமாக ஆகியிருக்கும் என் றும் தகவல்கள் கூறின. இதனிடையே, பிலிப்பீன்சை இரண்டில் ஒன்று பார்த்த அந்தச் சூறாவளி நேற்று ஹாங்காங்கை புரட்டிப்போட்டது. அதோடு நின்று விடாமல் தென்சீனாவையும் அது பயங்கரமாக மிரட்டி, அங்கும் மழையையும் சேதத்தையும் ஏற்படுத் தியது.

ஹாங்காங்கில் 250 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயரமான கட்டடங்கள் அசைந் தன. மரங்கள் வேரோடு சாய்ந் தன. கட்டடங்களின் சன்னல்கள் நொறுங்கின. சிங்கப்பூரிலிருந்து செல்லும் பல விமானச் சேவைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சேவைகள் ரத்தாயின. ஹாங்காங் விமான நிலையம் ஏறக்குறைய நேற்று மூடப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஹாங்காங்கை முடித்துக் கொண்டு சூறாவளி ஹாங்காங் அருகே இருக்கும் சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் கரையைக் கடந்தது. அங்கு அதிவேக ரயில் சேவை கள் நிறுத்தப்பட்டன. அங்குள்ள இரண்டு அணுசக்தி ஆலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு இருந்தன. ஹாங்காங், சீனாவில் உயி ருடற் சேதத் தகவல்கள் இல்லை. என்றாலும் சூறாவளி காரணமாக ஹாங்காங்கிலும் தென் சீனா விலும் கனமழை பெய்து சேதம் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவித்தன. ஹாங்காங்கில் இருந்தும் சீனாவிலிருந்தும் பலரும் சமூக ஊடகங்களில் சூறாவளியைக் காட்டும் காணொளிகளைப் பதிவேற்றினர். 250 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதையும் 12 மீ. உயரத்திற்கு அலைகள் எழும்பியதையும் அந்தப் படங்கள் காட்டின.