மன அழுத்தத்தில் இருந்து மீள்வோம்

வைதேகி ஆறுமுகம்

மனதளவில் பாதிக்கப்பட்டோரையும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரையும் நல்வழிப்படுத்த நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர், 24 மணி நேர ஆலோசனை போன்ற பலதரப்பட்ட சேவைகளைச் சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம் (Samaritans of Singapore) வழங்கி வருகிறது. அந்த வகையில் வெவ்வேறு காரணங்களி னால் மனதளவில் துவண்டுபோய் வாழ்வில் இருளைச் சந்தித்திருக்கும் இளையர்களுக்கு உதவும் நோக்கில் இம்மாதம் 10ஆம் தேதியன்று 'த்ரு தி நைட்' (#Throughthe Night) எனும் இயக்கத்தை இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தின் மூலம் இச் சங்கம் தொடங்கவிருக்கிறது.

10 முதல் 19 வயதினருக்கு உட்பட்ட இளையர் கள் தங்களின் மனரீதியான பிரச்சினைகளுக்கு 24 மணிநேர அவசர தொலைபேசி எண் சேவையைச் சமீபகாலமாக அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார் கள் என்று இச்சங்கம் தெரிவித்துள்ளது. மன ஆறுதலுக் காக இச்சங்கத்தை நாடி வரும் இளையர் களின் எண்ணிக்கை 53 விழுக்காடு அதிகரித்துள் ளது. இந்நிலையில் அவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் இச்சங்கம் 'டிபிடபிள்யூஏ/சிங்கப்பூர்' (TBWA/Singapore) எனும் அமைப்புடன் இணைந்து இவ் வியக்கத்தை அமைத் துள்ளது.

இது தற்கொலைத் தடுப்புக் கான அனைத் துலக விழிப்புணர்ச்சி நாளன்று தொடங் கப்படவுள்ளது. 'த்ரு தி நைட் ஹேஷ்டெக்' குறியீட்டைத் தலைப்பாகக் கொண்டு பதிவேற்றம் செய்யப்படும் வாழ்க்கைக் குறிப்புகள், படங்கள், காணொளிகள் ஆகியவை 'த்ரு தி நைட் ஹேஷ்டெக்' இன்ஸ்டகிராம் பக்கத்தில் இடம்பெறும். பதிவேற்றங்களில் உள்ள அக்குறியீட்டை தட்டு வதன் மூலம் இன்ஸ்டகிராம் பயனா ளர்கள் எல்லோரும் இப்பக்கத்திலுள்ள அனைத்து வாழ்க்கைக் குறிப்புகளையும் காணொளிகளையும் கண்டு பயன்பெறலாம்.

இதற்கிடையே தற்கொலை சார்ந்த பிரச்சினைகள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இச்சங்கம் கலைஞர்களுடனும் இளையர்களுடனும் கைகோத்து பல நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

மன உளைச்சலில் இருந்து இளையர்களை மீட்கும் வகையிலான ஆலோசனை வழங்க அவர் கள் நேரடி ஒளிபரப்பில் பங்குபெறுவர். இம்மாதம் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கலைஞர்கள் நேரடி ஒளிபரப்பில் கலந்துகொள்வர். நள்ளிரவு பன்னிரண்டு முதல் பின்னிரவு 3 மணி வரையிலான நேரத்தில் இவை கலைஞர் களின் இன்ஸ்டகிராம் பக்கங்களில் ஒளிபரப் பப் படும். தற்கொலை முயற்சிகளை ஒரு கடுமை யான விவகாரமாக எடுத்துக்கொண்டு கலந்துரை யாடுவ தற்கும் அதற்கான முதல் படியாய் ஊக்கமூட்டும் குறிப்புகளை இத்தளத்தில் பகிர்ந்துகொண்டு இளையர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்து வதற்கும் இச்சங்கத்தின் செய்தித் தொடர் பாளர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத் துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!