குடியிருப்பாளர்கள் வசதிக்காக சுவா சூ காங் குழுத் தொகுதியில் சமூக சுகாதாரச் சாவடி

குடியிருப்பாளர்கள் சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை சமூக இடங்களில் எளிதில் பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் சுவா சூ காங் குழுத் தொகுதியில் சமூக சுகாதாரச் சாவடிகள் கியட் ஹோங், சுவா சூ காங், நன்யாங், ஹில்வியூ, அர்-ரவுதா பள்ளி வாசல், அல்-கேர் பள்ளிவாசல் ஆகிய ஆறு இடங்களில் நேற்று தொடங்கப்பட்டன. தேசிய பல்கலைக்கழக மருத் துவமனைக் குழுமத்தின் ஒத்து ழைப்புடன் இத்திட்டம் மேற்கொள் ளப்படுகிறது. நாள்பட்ட நோய் உடையவர்கள் காலந்தாழ்த்தாமல் விரைவில் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள சமூக சுகாதாரச் சாவடிக் குச் சென்று சிகிச்சை நாடலாம். நேற்றுக் காலை சுமார் 600 குடியிருப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து உற்சாகமாக உடற்பயிற்சி செய்தனர். 'ஹிஜ்ரா நடை' எனும் இந்த நிகழ்ச்சிக்கு அர்-ரவுதா பள்ளி வாசல், அல்-கேர் பள்ளிவாசல், மக்கள் கழகம், பெர்தாப்பிஸ் மலாய் அமைப்பு, சுவா சூ காங் குழுத் தொகுதியில் உள்ள சமூக மன்றங்களில் செயல்படும் மலாய் நற்பணிச் செயற்குழுக்கள் ஆகி யவை கூட்டாக ஏற்பாடு செய்தி ருந்தன.

சுவா சூ காங் குழுத் தொகுதி குடியிருப்பாளர்களுடன் ஹில்வியூ சமூக மன்ற வளாகத்தில் நேற்றுக் காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டனர் அக்குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (இடமிருந்து, முன் வரிசை) மூத்த நாடாளுமன்றச் செயலாளர் லோ யென் லிங், துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், யீ சியா சிங். படம்: பெரித்தா ஹரியான்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!